முகப்புகோலிவுட்

தனுஷுக்கு வில்லனாக நடிக்கு அந்த ஹீரோ யார் தெரியுமா…?

  | March 27, 2019 14:36 IST
Dhanush

துனுக்குகள்

  • வெற்றிமாறனின் அசுரன் படத்தில் இவர் நடித்து வருகிறார்
  • துரை செந்தில்குமார் படத்தில் இவர் நடித்து வருகிறார்
  • சினேகா இந்த படத்தில் தனுஷுடன் நடிக்கிறார்
வெற்றிமாறனின் வடசென்னை படத்தை தொடாந்து தனுஷ், மீண்டும் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தனுஷ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் தொடங்கியது.

புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.   

நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி இந்தப் படத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘சரபம்' படத்தின் ஹீரோ நவீன் சந்திரா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெயரிடப்படாது இந்தபடத்தைத் தொடர்ந்து அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்