முகப்புகோலிவுட்

R.J. பாலாஜி இயக்கும் அடுத்த படத்திலும் நயன்தாரா..!

  | December 06, 2019 12:12 IST
Rj Balaji

துனுக்குகள்

  • RJ பாலாஜி மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
  • இப்படத்தில் அவருடன் நயன்தாரா நடிக்கிறார்.
  • இப்படத்தை RJ பாலாஜி மற்றும் NJ சரவணன் இணைந்து இயக்குகின்றனர்
‘மூக்குத்தி அம்மன்' படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்.கே.ஜி திரைப்படத்தையடுத்து ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்துக்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். மேலும், முதல் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். அவர் என்.ஜே. சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில், அவருடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியது.
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தையடுத்து பாலாஜி இயக்கும் புதிய திரைப்படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் போலீஸ் படங்களின் ஸ்பூஃப் படம் என்றும், இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயந்தாரா நடிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com