முகப்புகோலிவுட்

நயன்தாராவின் விரதம் முடிந்தது..! விரைவில் ’மூக்குத்தி அம்மன்’ போஸ்டர் ..!

  | February 08, 2020 14:34 IST
Mookkuthi Amman

“மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது..! கோடை விடுமுறையில் அருள் பாலிக்க வருகிறாள் அம்மன்..!” - ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

எல்.கே.ஜி திரைப்படத்தையடுத்து ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். எல்.கே.ஜி படத்துக்குக் கதையை மட்டும் எழுதிய அவர், கதாநாயகனாக நடிப்பது முதல் முறை என்பதால், அப்படத்துக்கு இயக்குனராக கே.ஆர். பிரபுவை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தனது இரண்டாவது படமான மூக்குத்தி அம்மனுக்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி, இயக்குனர் என்.ஜே. சரவணனுடன் இணைந்து இயக்கவும் உள்ளார். இயக்குனராக இதுவே அவருக்கு முதல் படமாகும்.

இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அம்மனாக நடிப்பதால் இப்படத்துக்காக நயன்தாரா விரதமிருந்து நடித்தது. குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வேல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. மெரினா, அவள், நயன்தாராவின் ‘நெற்றிக்கண்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. இதனை ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் “மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது..! கோடை விடுமுறையில் அருள் பாலிக்க வருகிறாள் அம்மன்..!” என பதிவிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனறும் அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நயந்தாராவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்