முகப்புகோலிவுட்

கோவா வெக்கேஷன் முடிந்தது.., விக்கியுடன் சென்னை திரும்பிய நயன்.!

  | September 22, 2020 00:25 IST
Nayanthara

இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.

கொச்சியில் ஓணம் கொண்டாடிய பிறகு, விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களுக்கு பிடித்த இடமான கோவாவுக்கு ஒரு ஸ்பெஷல் பேமிலி ட்ரிப் சென்றிருந்தனர்.

அங்கேயே ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளையும், அடுத்த சில நாட்களில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையும் மிக சிறப்பாக கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

3pmf3qs8

இப்போது தங்களது வெக்கேஷனை முடித்துக்கொண்டு நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சென்னை திரும்பியுள்ளார். இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.

am6c6j1o

சென்னை திரும்பியுள்ள பிரபலங்கள் தங்களது சினிமா பணியை மீண்டும் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சம்ந்தாவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com