முகப்புகோலிவுட்

கோவாவில் தாயின் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா.! வைரல் புகைப்படங்கள்...

  | September 16, 2020 11:26 IST
Nayanthara

விக்னேஷ் தனது அம்மா மற்றும் நயன்தாராவின் சில அழகான வெள்ளை நிற உடைப் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து தனது தாயின் பிறந்தநாளுக்காக கோவாவில் ஒரு சர்ப்ரைஸான பிறந்தநாள் விழாவை நடத்தினர். அந்த பிறந்தநாள் பார்ட்டுயிலிருந்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்று நயன்தாரா தனது அம்மாவுடன் கேக் வெட்டும் படத்தைப் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் விக்னேஷ் தனது தாயுடனும் கானப்படுகிறார். புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இயக்குநர் விக்கி, “எனது அன்புக்குரிய அம்மு திருமதி. குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று எழுதினார்.

கொச்சியில் ஓணம் கொண்டாடிய பிறகு, விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களுக்கு பிடித்த இடமான கோவாவுக்கு ஒரு ஸ்பெஷல் பேமிலி ட்ரிப் சென்றுள்ளனர். முன்னதாக, விக்னேஷ் தனது அம்மா நீச்சல் குளத்தில் தனது நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் சில புகைப்படங்களையும், ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் சில அழகான வெள்ளை நிற உடைப் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com