முகப்புகோலிவுட்

திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.20 லட்சம் அளித்த நயன்தாரா..!

  | April 04, 2020 16:50 IST
Nayanthara

முன்னதாக நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே FEFSI தொழிலாளர்களுக்காக ரூ. 1 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் FEFSI உறுப்பினர்களுக்கு உதவுமாறு FEFSI தலைவர் ஆர்.கே.சல்வமணி நேற்று, நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட சகோதரத்துவத்திடம் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளையடுத்து நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, யோகி பாபு, ஜெயம் ரவி என பல நடிகர்கள் பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்துவருகின்றனர். 

தற்போது, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு (FEFSI) நன்கொடை அளித்த நடிகர்களின் பட்டியலில் ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா சேர்ந்துள்ளார். கொரோனா தொற்றுநோய் நாடு முழுவதும் தீவிரமாக வரவிவரும் இந்நிலையில், திரைப்பட ஊழியர்களின் தேவைகளை கவனித்துக்கொள்வதற்காக ரூ. 20 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார் நயன்தாரா.

முன்னதாக நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே FEFSI தொழிலாளர்களுக்காக ரூ. 1 லட்சம் நன்கொடையாக அளித்தார். அதே நேரத்தில் மூத்த நடிகை ஸ்ரீப்ரியாவின் குடும்பத்தினர் முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 30 லட்சம் நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com