முகப்புகோலிவுட்

விரதம் இருக்கும் நயன்தாரா? விளக்கம் கொடுத்த RJ பாலாஜி!

  | November 18, 2019 18:01 IST
Nayanthara

துனுக்குகள்

 • N.J.சரவணன் மற்றம் Rj பாலாஜி இணைந்து இந்த படத்தை இயக்குகிறார்கள்
 • இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருக்கிறார்
 • இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார்
Jio saavan வழங்கும் ‘Maind Voice' என்கிற நிகழ்ச்சியை நடிகர் RJ பாலாஜி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்தியாவில் நடக்கும் முக்கிய சம்பவங்களை விளையாட்டு முதல் சினிமாவரை சமூகம் முதல் அரசியல் வரை அனைத்ததையும் தன் நையாண்டி கலந்த வழியில் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சி தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய ஆர்.ஜே. பாலாஜி,
 
“சமீப காலாமாக பிரச்னைகள் குறித்து பேசுவதைவிட அந்த பிரச்னை தொடர்பாக கோபம் வருவதே அதிகமாக இருக்கிறது. அப்படி இல்லாமல் நம்மை சுற்றியுள்ள சிறு சிறு சந்தோஷமான விஷயங்கள் பற்றி பகிர்ந்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கும். அதே போன்று வெகுஜன மீடியாக்களில் வெளிவராத சிறிய பிரச்னைகள் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் உரையாட இருக்கிறேன். இதை Jio saavan-ல் இணைந்து செய்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் பின் என்.ஜே.சரவணன் மற்றம் Rj பாலாஜி இணைந்து இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்'  திரைப்படம் குறித்து பேசினார்,
 
“நானும் ரவுடிதான் படத்தில்  இருந்தே நயன்தாரா எனக்கு நல்ல நண்பர். இந்த படம் தொடர்பாக ஒரு நாள் மாலை வேலையில் அவரை சந்தித்து அரை மணிநேரம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துபோக உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
 
இது முழுக்க முழுக்க பக்தி படம். சமீப காலமாக தொடர்ந்து பேய் படங்களாக வருகிறது. சாமி படங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. நான் சாமி நம்மிக்கை உடையவன் அதனால் இந்த படம் எடுக்க முடிவு செய்தேன். இந்த படத்தில் ஒரு செய்தியையும் நான் சொல்லவிருக்கிறேன்.
 
இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்துக்கொடுப்பதாக தெரிவித்தார். படம் தொடங்கவிருக்கிறது இப்போதே படக்குழுவினர் பயபக்தியோடு அசைவ உணவகங்களை தவிர்த்து சைவ உணவிற்கு மாறிவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பவாணி அம்மனின் இன்னொரு பெயர் ‘மூக்குத்தி அம்மன்' அதனால் இந்த பெயரை வைத்தேன்” என்றார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com