முகப்புகோலிவுட்

பாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கிறாரா நயன்தாரா?

  | March 28, 2018 13:09 IST
Nayanthara

துனுக்குகள்

  • அனுஷ்கா ஷர்மா நடித்த படம் `பரி'
  • பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது
  • இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது
ப்ரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து மார்ச் 2ம் தேதி வெளியான படம் `பரி'. ஹாரர் படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் அனுஷ்காவின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டு பெற்றது.

படத்தை பார்த்த சில தமிழ் தயாரிப்பாளர்கள் அப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்களாம். தற்போது அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், எல்லாம் முடிவான பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

`பரி' தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா ஷர்மா நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com