முகப்புகோலிவுட்

ஒரே கதாபாத்திரத்தில் நயன்தாரா - சோனம் கபூர்..!!

  | November 18, 2019 15:22 IST
Nayanthara

துனுக்குகள்

 • நயந்தாராவின் அடுத்த திரைப்படம் ‘நெற்றிக்கண்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
 • இப்படம் கொரியன் படமான ‘பிளைண்ட்’ படத்தின் ரீமேக்காகும்.
 • இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார்.
பிளைண்ட் எனும் கொரியன் படத்தின் ரீமேக்கீல் ஒரே கதாபாத்திரத்தில் நயன்தாரா மற்றும் சோனம் கபூர் நடிக்கின்றனர்.

கொரியன் க்ரைம் த்ரில்லர் படமான ‘பிளைண்ட்' 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஆங் சா வூன் இயக்கியுள்ளார். விபத்தில் கண் பார்வையை பரிகொடுத்த பெண்ணின் கதையை கூறும் இப்படம் சீனா, ஜப்பான் உட்பட பல உலக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, தமிழில் ‘நெற்றிக்கண்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நயன்தாரா முன்னனி கதாப்பாதிரத்தில் நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் ஷிவன் தயாரிக்க, சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ‘அவள்' திரைப்படத்தை இயக்கிய மிலந்த் ராவ் இயக்குகிறார்.
இந்நிலையில், இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் நயன்தாரா நடிப்பது போல், இந்தியில் சோனம் கபூர் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே நேரத்தில், இரு நடிகைகள் ஒரே கதாப்பாத்திரத்தில் வெவ்வேறு மொழிகளில் நடிப்பதனால், இரு மொழியிலும் இப்படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com