முகப்புகோலிவுட்

மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணையும் நயன்தாரா..?

  | May 15, 2019 13:42 IST
Suriya 39

துனுக்குகள்

  • இயக்குநர் சிவா இப்படத்தை இயக்கவிருக்கிறார்
  • டி, இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • இப்படத்தில் நயன்தாரா நடிக்க பேச்சவார்த்தை நடந்து வருகிறது
கடந்த 2009ம் ஆண்டு சூர்யா- நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'ஆதவன்'. இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதாரா ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது.
 
இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா ஜோடி பெருமளவில் பாராட்டப்பட்டது இப்படத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து நடித்த படம் 'மாஸ்' இப்படம் பெரியளவில் சூர்யாவிற்க கைகொடுக்கவில்லை என்றாலும் சூர்யா, நயன்தாரா நடிப்பு பாராட்டுகளை பெற்றது. மீண்டும் இவர்கள் எப்போது நடிப்பார்கள்  என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போத அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவிருக்கிறது.
 
ஆம் விஸ்வாசம் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா சூர்யாவின் 39வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா - சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.
 
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
 
சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
மேலும் டி.இமான் இந்த படத்திற்கு இசையைமக்க இருப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்திலும் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சூர்யாவின் நடிப்பில் 'என்.ஜி.கே'., 'காப்பான்' ஆகிய படங்கள் வெளியாக தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்