முகப்புகோலிவுட்

நயன்தாராவிற்கு அடுத்த ஆண்டு திருமணம்…?

  | May 07, 2019 14:11 IST
Nayanthara

துனுக்குகள்

 • மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா
 • ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்
 • விஜய் நடிக்கம் தளபதி 63 படத்திலும் நடித்து வருகிறார்
2005ம் ஆண்டு  ஐயா திரைப்படத்தின் மூவம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமாகி, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
 
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் கதாநாகியாக வலம் வருகிறார் இவர்.  நடிக்க வந்த தொடக்கத்தில் இவரைப்பற்றி பல்வேறு விமர்சனங்களும் கிசுகிசுக்களும் ஓயாமல் துரத்தியது. எல்லா வற்றையும் கடந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உயந்திருக்கிறார்.
 
இவருடைய திருமணம் குறித்து பல்வேறு கேள்விகள் இன்றும் கேள்விக்குறியாகவே இருந்து வந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்று பேசப்பட்டது.
 
அவ்வப்போது இருவரும் ஜோடியாக எடுத்திருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். ஆனால் இதுவரை வெளிப்படையாக காதலிக்கிறோம் என்று  கூறவில்லை.
 
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ்சிவன் திருமணம் குறித்து இருவரது வீட்டிலும் பேசியுள்ளதாகவும், நவம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
 
தற்போது நயன்தாரா தர்பார் மற்றும் விஜய்63 படங்களில் படு பிசியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தனது திரைப்பயணத்தை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com