முகப்புகோலிவுட்

நயன்தாராவுடன் கத்ரீனா கைஃப் வெளியிட்ட வைரல் வீடியோ!

  | October 22, 2019 19:33 IST
Nayanthara

துனுக்குகள்

  • கத்ரீனா கைஃப் Kay Beauty campaign நடத்துகிறார்
  • நயன்தாராவும் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்
  • நயன்தாரா நடித்துள்ள பிகில் படம் 25ம் தேதி வெளியாகிறது

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகை கத்ரீனா கைஃப்.( katrinakaif) முன்னணி நடிகையக இருக்கும் இவர் தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்துள்ளார். அதற்கு அதற்கு கே பியூட்டி (Kay Beauty campaign ) என்று பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், என் பயணத்தில் ஒப்பனை ஒரு முக்கிய பங்காக இருக்கிறது.

நம்மை எது மகிழ்ச்சியாக்குகிறதோ அதில் தான் அழகு இருக்கிறது என்பதை நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.  கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர்.


அவர்களில் நயன்தாராவும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் கத்ரீனா, “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் கே பியூட்டி வெளியீட்டுக்காக மும்பைக்கு பறந்து வந்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் தாராள மனதுடையவர். கனிவானவர்.

என்றென்றும் நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார். நடிகை நயன்தாரா ‘பிகில்' மற்றும் ‘தர்பார்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிகில் வரும் 25ம் தேதியும், தர்பார் படம் பொங்கல் அன்றும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Presenting @kaybykatrina to all of you. It's truly a dream which has come into existence so beautifully. Thank you to my entire team, Nykaa, Falguni Nayar, Reena Chhabra and everyone for helping me achieve this..so much love to all of you from the bottom of my heart..❤ lastly..always remember, be authentic, be real, be yourself...because #ItsKayToBeYou. NOW OUT IN STORES AND NYKAA.COM (link in bio) @mynykaa #KayByKatrina #KayXNykaa #MakeupThatKares Thank u to all the beautiful women who collaborated with me on this ... you are all truly Queens! @zoieakhtar @anaitashroffadajania @nehwalsaina @therajakumari @kushakapila @jannatzubair29 @urvashi_umrao @andreakevichusa @sanathampi @priyadarshini.96 @anugrahanatarajan @haima_simoes #Nayanthara #Appoorva #Simone

A post shared by Katrina Kaif (@katrinakaif) on



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்