முகப்புகோலிவுட்

பொறுப்பற்று வெளியே செல்பவர்களை சரமாரியாக திட்டும் 'நயன்தாரா' மகள்..!!

  | March 27, 2020 14:01 IST
Manasvi

மானஸ்வி, த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு' படத்திலும், ரஜினியின் ‘தர்பார்' திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா-வின் மகளாக அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி. இவர் பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகளாவார்.

இந்த 5 வயது குட்டி நட்சத்திரம் தற்போது மிகக் கோபத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலரும் நிலைமை புரியாமல் பொறுபாற்று வெளியே வாகனங்களில் சென்றுவருவதால், மானஸ்வியின் இன்ஹ வீடியோ செம வைரலாகிவருகிறது.

அவர் அந்த வீடியோவில “உங்களுக்கு  ஒரு தடவை சொன்னா புரியாதா..? உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா..? இந்த சமுதாயத்தில் பெரியவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விட என்னைப் போன்ற இளம் குழந்தைகள் அதிக சமூக உணர்வையும் விழிப்புணர்வையும் காட்டுகிறார்கள். நீங்க எல்லாம் வெளிய போகாம இருந்தா தான, கொரோனா குறையும், அப்ப தான என்ன மாதிரி குட்டி குழந்தைகள் எல்லாம் ஸ்கூலுக்குலாம் போகமுடியும்” என்று பேசியுள்ளார்.

மானஸ்வி, த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு' படத்திலும், ரஜினியின் ‘தர்பார்' திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்