முகப்புகோலிவுட்

தடைகளைத்தாண்டி இறுதியில் உறுதியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி!

  | July 20, 2019 20:33 IST
Nayanthara

துனுக்குகள்

  • இப்படம் வரும் ஜுலை26ல் வெளியாகிறது
  • இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா விலகியதை அடுத்து சந்தோஷ் நாராயணன் இணைந்தார்
  • இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகா நடிக்கிறார்
தமிழில் உன்னைப் போல் ஒருவன், பில்லா2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி கடந்த ஆண்டு இயக்கிய திரைப்படம் ‘கொலையுதிர்காலம்'. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவாகி வெளியாக தயார் நிலையில் இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களில் இப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தது.
 
இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 26ம்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இருந்து விலக சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகாநடித்துள்ளார். எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க பெரும் எதிர்பார்ப்புகளோடு இப்படம் வெளியாக இருக்கிறது.  
 
மேலும் இப்படம் வெளியாகும் அதே நாளில், சந்தானம் நடிப்பில் ‘ஏ1 அக்யூஸ்ட் நண்பர் 1', ‘நுங்கம்பாக்கம்',சமுத்திரகனி நடித்திருக்கும் ‘கொளஞ்சி' ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்