முகப்புகோலிவுட்

அல்டிமேட் ஸ்டாருடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார்!

  | August 05, 2019 16:23 IST
Nayanthara

துனுக்குகள்

 • வரும் 8ம் தேதி நேர்கொண்ட பார்வை வெளியாக இருக்கிறது
 • 9ம் தேதி கொலையுதிர் காலம் வெளியாகிறது
 • 7வது முறையாக கொலையுதிர்காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
இயக்குநர் சக்ரி டுலெட்டி  இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கொலையுதிர் காலம்'. கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்த்த இப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
 
இந்த மாதம் ஆகஸ்ட் 2ல் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் இப்படத்தின் ரிலீஸ் தேதி 7வது முறையாக மாற்றப்பட்டது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 9ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
ஆகஸ்ட் 8ல் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் நயன்தாராவின் கொலையுதிர்காலம் படம் அடுத்த நாளே வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொலையுதிர்காலம் படத்திற்கு தியேட்டர்கள் எந்தளவிற்கு கிடைக்கும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு இணையாக இந்தபடம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஜித்துடன், பில்லா, ஆரம்பம், ஏகன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித்துடன் முதல் முறையாக மோதுகிறார் நயன்தாரா. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்துடன் போட்டியிட்டது அஜித்தின் விஸ்வாசம். தற்போது லேடி சூப்பர் ஸ்டாரின் படத்துடன் போட்டியிட இருக்கிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை. என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com