முகப்புகோலிவுட்

நயன்தாராவின் "கொலையுதிர் காலம்" எப்போது வெளியாகிறது...?

  | May 20, 2019 13:42 IST
Nayanthara

துனுக்குகள்

  • இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கி இருக்கிறார்
  • வி.மதியழகன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்
  • தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்' படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்கள் நயன்தாராவின் நடிப்பிற்காக இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.  தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
 
எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
 
நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்