முகப்புகோலிவுட்

“கொலையுதிர் காலம்” திரைப்படம் மீண்டும் தள்ளிவைப்பு!

  | August 03, 2019 18:23 IST
Kolaiyuthir Kaalam Release Date

துனுக்குகள்

 • 7வது முறையாக இப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது
 • இப்படத்தின் மீது வழக்கு இருந்ததால் படம் வெளியாகமல் இருந்தது
 • இப்படம் நேற்ற வெளியாக இருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அறம், மாயா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் அடுத்து இவர் நடிப்பில் கடந்த ஆண்ட வெளியாக இருந்த ‘கொலையுதிர்காலம்' தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த ஆண்டு ஜனவரியில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது ஆனால்  பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியானதால் பிப்ரவரிக்கு தள்ளிவைத்தனர். அதன்பிறகு படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் ரிலீஸ் மே மாதத்துக்கு தள்ளிப்போனது.
 
பிறகு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு வழக்கு விசாரணைகள் முடிந்து ஜூலை 26-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வரவில்லை. ஆகஸ்டு 1-ந் தேதி வெளியாகும் 2-ந் தேதி வெளியாகும் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனால் நேற்றும் படம் திரைக்கு வரவில்லை. 7-வது முறையாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com