முகப்புகோலிவுட்

நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரையிட இடைக்காலத் தடை!

  | June 11, 2019 20:52 IST
Nayanthara

துனுக்குகள்

  • நயன்தரா இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்
  • இப்படம் வருகின்ற 14ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது
  • நீதிமன்றம் இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது
நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சக்ரி டொலெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கம் திரில்லர் திரைப்படம் ‘கொலையுதிர்காலம்'.  இப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
 
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி குமார்.
 
தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் நீதி மன்றத்தை நாடியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜின் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
 
இப்படத்தை எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்