முகப்புகோலிவுட்

கன்னடத்தில் ரீமேக்காகும் நயன்தாராவின் சூப்பர்ஹிட் திரைப்படம்.!

  | August 05, 2020 23:31 IST
Nayanthara

ரீமேக் உரிமைகளுக்காக லைக்காவுடன் கலந்துரையாடி வருவதாக இயக்குநர் மயூரா ராகவேந்திரா கூறியுள்ளார்.

கோலிவுட் ‘லேடி சூப்பர் ஸ்டார்' நடிகை நயன்தாரா பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் வலுவான கதாப்பாத்திரங்களில் நடித்துவருகிறார். இபோது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்' படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப் குமாரின் அறிமுக திரைப்படமான ‘கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். தமிழ் பார்வையாளர்களின் மனதை வென்று வணிக ரீதியான வெற்றியைப் இப்ப்டம் பெற்றது. 2018 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

g3dl3vio

இப்போது சமீபத்திய சுவாரஸ்யமான அறிக்கை என்னவென்றால், நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா' படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆமாம், நடிகை ரச்சிதா ராம் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் மற்றும் ‘கன்னட் கோத்திலா' படப்புகழ் மயூரா ராகவேந்திரா இதனை இயக்கவுள்ளாராம். இந்த கன்னட ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

hqdp2gh

இதுகுறித்து இயக்குநர் மயூரா ராகவேந்திரா ஒரு தனியார் உடகத்துக்கு அளித்த பேட்டியில், இது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன என்றும், ரீமேக் உரிமைகளுக்காக லைக்காவுடன் கலந்துரையாடி வருவதாகவும், ஒப்பந்தம் முடிவானதும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com