முகப்புகோலிவுட்

சூரரைப் போற்றை தொடர்ந்து OTT-ல் வெளியாகும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’.?

  | August 29, 2020 18:38 IST
Nayanthara

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று' தயாரிப்பாளர்கள் இந்த படத்தை OTT மேடையில் நேரடியாக வெளியிடத் தயாராக இருப்பதாக ஒரு அறிவிப்பு வந்த பின்னர், தனுஷின் ‘ஜகமே தந்திரம்' உட்பட பல பெரிய படங்களையுன் அதன் நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் வெளியிடும் என்று ஊகிக்கப்பட்டது. இருப்பினும், தனுஷின் ‘ஜகமே தந்திரம்' மற்றும் ‘தளபதி' விஜய்யின் ‘மாஸ்டர்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் அப்படங்களை வெளியிடுவதற்காக தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருப்போம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். நேரடி OTT வெளியீடு குறித்த வதந்திகளையும் அவர்கள் மறுத்தனர்.

இப்போது, நயன்தாராவின் வரவிருக்கும் படமான மூக்குத்தி அம்மனின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை OTT தளத்தில் வெளியிடுவார்கள் என்று ஒரு புதிய அறிக்கை வந்துள்ளது. படத்தை தொலைக்காட்சியில் வெளியிடுவதற்கும் தயாரிப்பாளர்கள் பரிசீலித்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கான உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இருப்பினும், அறிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. படத்தின் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் மூக்குதி அம்மன். இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். பிகில் படத்தில் நடிகர் விஜய் மற்றும் நயன்தாராவுடன் திரை இடத்தைப் பகிர்ந்துகொண்டிருந்த நடிகை இந்துஜா, இப்படத்தில் ஒரு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. மெரினா, அவள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com