முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படக் கதையை வெளிப்படுத்திய இயக்குநர் நெல்சன்.!

  | June 11, 2020 19:40 IST
Nelson Dilipkumar

துனுக்குகள்

  • KJR ஸ்டுடியோஸ் & சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
  • இப்படம் 2020 கிறிஸ்துமஸ் வெளியீடு எனக் கூறப்படுகிறது.

பி. எஸ். மித்ரன் இயக்கிய ‘ஹீரோ' என்ற அதிரடி சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கடைசியாக திரையில் காணப்பட்டார். அதையடுத்து, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்' மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில், டாக்டர் திரைப்படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் கிறிஸ்துமஸ் 2020 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது சமீபத்திய பேட்டியில், 'டாக்டர்' ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்ற எண்ணம் மக்களுக்கு இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாறாக, இது மிகவும் வேடிக்கை நிரம்பிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், கதையில் மருத்துவராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆறு பேருடன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதாகவும், அவர்கள் அனைவரும் எப்படி அதிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதே மீதமுள்ள திரைக்கதை என்றும் அவர் கூறியுள்ளார். தனது முந்தைய படத்தை விட இப்படத்தில் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com