முகப்புகோலிவுட்

திரை நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் “நேர்கொண்ட பார்வை"

  | August 08, 2019 16:57 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • நேர்கொண்ட பார்வை படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
  • பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு வாழ்த்து தெறிவித்து வருகின்றனர்
  • நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்
அஜித் நடிப்பில் இன்று நாடுமுழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
 
இன்று அதிகாலை முதலே இந்த படத்தைக் காண மக்கள் திரளாக திரையரங்கம் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர். ரசிகர்களோடு சேர்ந்து திரைப்பிரபலங்களும் படத்தை கண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றினர்.
நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
 
“ நேர்கொண்ட பார்வை படத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இது போன்ற முக்கியமான பிரச்னையை பேசும் படங்கள் தமிழ்சினிமாவிற்கு தேவை. சமூக பொறுப்புள்ள இம்மாதிரியான கதையை தேர்வு செய்த நடிகர் அஜிர் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை தயாரித்த போனிகபூர், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
 
 
இப்படத்தை பற்றி கூறியுள்ள வரலக்ஷமி சரத்குமார்,
“அஜித் சார் இந்த படத்தில் நடித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த படம் மூலம் இந்த சமூகம் ஒன்றை கற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். நேர்கொண்ட பார்வை குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றிருக்கிறார்.
 
 
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்,
“நேரு கொண்ட பார்வை
காங்கிரஸ் கொண்ட பார்வை
Bjp கொண்ட பார்வை
காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்!” என வித்யாசமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இன்னும் பலர் இப்படத்தை தொடர்ந்து பாராட்டி வாழ்த்து தெறிவித்து வருகிறார்கள்.

   
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்