முகப்புகோலிவுட்

நேர்கொண்ட பார்வை படத்திற்கு கூடுதல் கட்டணம்! வருவாய்துறை அதிரடி நடவடிக்கை!

  | August 12, 2019 13:48 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • கடந்த 8ம் தேதி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது
  • இப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகர்கள் வந்தன
  • வேலூரில் வருவாய் துறையினர் திரையரங்குகளில் ஆய்வு செய்தனர்
போனிகபூர் தயாரிப்பில் கடந்த 8ம் நாள், வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை'. இப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது இப்படம். சென்னையில் மட்டும் முதல் 3 நாட்களில் 4 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இப்படம் வெளிநாட்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் பலர் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
 
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சில திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
வந்த புகாரை அடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரையிடப்பட்டிருந்த 6 திரையரங்குகளில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
 
இதையடுத்து பார்வையாளர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.34,000- ரூபாயை வருவாய்த்துறை அதிகாரிகள் திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று பார்வையாளர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்