முகப்புகோலிவுட்

நேர்கொண்ட பார்வை படத்தை முதல் நாளிலே பார்த்து பாராட்டிய சூர்யா ஜோதிகா!

  | August 09, 2019 14:29 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • எதிர்பார்த்த விமர்சனத்தை இப்படம் பெற்றுள்ளது
  • நேற்ற சூர்யா ஜோதிகா இரண்டு பேரும் இப்படத்தை பார்த்துள்ளனர்
  • பல்வேறு திரைப்பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை' நேற்று வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
 
இந்தியில் கடந்த ஆண்டு வெளியான ‘பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கி இருக்கிறார். உலகம் முழுக்க இருக்கும் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரை பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
 
அந்த வகையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர். இப்படம் அவர்கள் இருவரையும் வெகுவாக கவர்ந்ததாம். படம் பார்த்து சந்தோஷமடைந்த சூர்யா, இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித் வீட்டிற்கு வாழ்த்து கூறி இருக்கிறார். தொடர்ந்து பாராட்டு மழையில் நேர்கொண்ட பார்வை இருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்