முகப்புகோலிவுட்

தமிழ்ராக்கர்ஸில் லீக்கான ‘நேர்கொண்ட பார்வை’ அதிர்ச்சியில் படக்குழு!!!

  | August 09, 2019 10:41 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • தமிழ்சினிமாவின் அச்சறுத்தலாக இருந்து வருகிறது தமிர்ராக்கர்ஸ்
  • இணையதளங்களில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது
  • சட்ட விதிகளை மீறி நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ்
அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தை நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழ்ராக்கர்ஸ் தனது இணயதளத்தில் வெளிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படத்தியுள்ளது.
 
 
போனிகபூர் தயாரிப்பில் இயக்குநர் எச்.வினேத் இயக்கத்தில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே இன்னும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. இன்று காலை நாடு முழுவதும் இப்படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சட்ட விரோதமாக இந்த படத்தை இணயதளங்களில்  வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரேதமாக இப்படத்தை இணயதளங்களில் வெளியிடக்கூடாது என்று கூறியிருந்தனர்.
 
தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ்ராக்கர்ஸ், படத்தை வெளியிடுவோம் என்று டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது தங்களது தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் இப்படத்தை வெளியிட்டிள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெரும் சவாலாக இருக்கும் தமிழ்ராக்கர்ஸ் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இப்படியாக தொடர்ந்து திரைப்படங்களை இணையதளங்களில் பதிவிடுவதால் சிறு மற்றும் பெரிய  தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள். விரைவில் தமிழ்ராக்கர்ஸ் போன்ற சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற இணையதளங்களை மக்களாகிய நாமும் தவிற்போம் திரையுலகிற்கு கைகொடுப்போம்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்