முகப்புகோலிவுட்

“கட்டாயம் பார்க்க வேண்டிய படம் நேர்கொண்ட பார்வை” படக்குழவுடன் சிறப்பு நேர்காணல்!

  | August 24, 2019 11:12 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • வரும் 8ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது
  • இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
  • போனிகபூர் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜித்
கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பிங்க்'. இந்த படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் தயாராகி இருக்கிறது. அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க இவர்களுடன். ஷர்தா ஸ்ரீநாத், அபி, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஷ்வின் ராவ் இன்னும் பலர் நடித்துள்ளனர். வரும் 8ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஷ்வின்ராவ் ஆகியோரிடம் நேர்காணல் செய்தோம்.

கலகலப்பான இந்த நேர்காணலில் முதலில் அறிமுகமாகி பேசிய அர்ஜுன் சிதம்பரம்,
“படம் நல்லா வந்திருக்கு, ஆடிஷன் மூலமாகத்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. அசோஷியேட் டைரக்டர்தான் எனக்கு கால் பண்ணி ஆடிஷனுக்கு அழைத்தார். எனக்கு ஆடிஷன் மட்டுமே ஒருமாதம் போனது. அஷ்வின்ராவும் ஆடிஷன் மூலம்தான் வந்தார்” என்றதும் அஷ்வின்ராவ் பேசத்தொடங்கினார்,
 
e5ffhqcg


“ எனக்கு ஆடிஷன் 48மணி நேரம்தான் ஆனது. திடீரென ஒருவர் கால் பண்ணி இதுமாதிரி அஜித் சாரோட படம் ஒன்னு இருக்கு நடிக்கிறீங்களா என்றார். நான் யாரோ நம்ம பசங்கதான் கலாய்க்கிறாங்கனு நினைச்சேன். வினோத் சாரை சந்தித்தேன். பிங்க் படத்தின் ரீமேக் எடுக்கப்போகிறோம் என்பதை தெரிந்துக்கொண்டேன். ஆடிஷன் போன இந்த ரோல் எனக்கு செட் ஆகாது வேண்டாம் என்றேன். வினோத் சார்தான் ‘இல்ல உனக்க இந்த ரோல் நல்லா சூட் ஆகும்' என்று சொன்னார். உடனே சூட் போயாச்சி” எனக்கு சுரேஷ் சந்திரா சார் போன் பண்ணி இந்த மாதிரி ரோல் இருக்கு பண்ணுங்க என்று சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வினோத் சாருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறார்கள் என்னை அவர் தேர்ந்தெடுத்தது எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநராக வருவோம் ஸ்கிரிப்ட் எழுதுவோம், அதை சொல்லுவோம் ஆனால் கேமிரா முன்னாடி அதை நான் பண்ணியது இல்லை. இந்த தளம் எனக்கு முற்றிலும் வித்யாசமாக இருந்தது” என நெகிழ்ச்சியாக பேசுகிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இயக்குநர் எச்.வினோத் பற்றி பேசிய அர்ஜுன் சிதம்பரம், “வினோத் சார் சொன்னதை மட்டும் செய்தால் போதும் 90சதவீதம் முடிந்துவிடும். அதற்கு பிறகு வேற எப்படி பண்ணலாம், உங்களுக்கு ஏதாவது தோணுதா என்று கேட்பார். அதனால நாங்க எதுவும் சொன்னது இல்லை அவர் என்ன சொல்றாரே அதை அப்படியே செய்வோம். அப்படிதான் நாங்க செட்ல இருந்தோம்” என்றவரைத் தொடர்ந்து இப்படத்தில் கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார் ஆதிக், “அஜித்சாரோட நடித்தது என்பது ஒரு பெரிய பிரம்மிப்பு. இந்த பிரம்மிப்புல இருந்து வெளியவருவதே பெரிய அனுபவமாக இருந்தது. அவர் ஒரு புக். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. எப்படி ஒருவரை மதிக்க வேண்டும், பெண்களை எப்படி அனுக வேண்டும். மனிதர்களை எப்படி நேசிக்க வேண்டும், அவர் சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவருக்கும் மரியாதை கொடுப்பார். இப்படி அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. நாங்கள் அதை கற்றுக்கொண்டோம். உன்னோட விசுவாசத்தை காட்ட இன்னொருவரைப்பற்றி தவறாக சொல்லக்கூடாது என்கிற வசனம் இந்த படத்தில் இடம் பெறும். ஆனால் அதை எங்களுக்கு புரியவைத்தார். ஒவ்வொரு நாள் சூட்டிங் முடிந்ததும் ஒரு அரைமணிநேரம் அஜித் சாரோட பேசுவோம். நான் இன்னைக்கு நல்ல நடிச்சனா என்று எங்களிடம் கேட்பார். அப்படி இயல்பாக எல்லோரிடமும் பழகக்கூடியவர். இந்த படம் எங்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது” என்றவரைத் தொடர்ந்து அஷ்வின் ராவ் இப்படம் பற்றி பேசினார்,

“இன்று உலக அளவில் குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை குறித்து ஆழமாக பேசும் படம்'நேர்கொண்ட பார்வை'. விஸ்வாசம் போல ஒரு மாஸ் படத்தை கொடுத்துவிட்டு அடுத்து இப்படியான ஒரு கதாபாத்திரம் உடைய படத்தை அஜித் சார் தேர்ந்தெடுத்திருப்பது என்பது இந்த சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் பொறுப்புதான் காரணம். பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள், பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் கட்டுபாடுகள் ஏன் ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை. போன்ற விஷயங்களை இந்த படம் பேசும். பெண்களுக்கான சுதந்திரத்தை பரிக்க நாம் யார், நாம் பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்கிறோம் போன்ற விஷயங்கள் படத்தில் ஆழமாகப் பேசப்பட்டிருக்கிறது. நிச்சயம் இந்த படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த படத்தில் நடித்திருக்கும் அபி, ஷர்தா உள்ளிட்ட பெண்கள் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை தத்ரூபமாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். காட்சி மூலமாக அந்த வலியை மக்களுக்கு கடத்துவார்கள். நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் குறிப்பாக இந்த படத்தை ஆண்கள் பார்க்க வேண்டும்” என்றவருக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்