முகப்புகோலிவுட்

ஹிப்ஹாப் தமிழாவின் ‘நான் ஒரு ஏலியன்’; வைரலாகும் முதல் சிங்கிள்.!

  | August 06, 2020 21:38 IST
Naan Oru Alien

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ‘நான் ஒரு ஏலியன்’ என்ற புதிய ஆல்பம் பாடல்களை வெளியிடவுள்ளார்.

ஒரு சுதந்திர இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி, குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாடகராகவும், இசையமைப்பாளராகவும் ஆனார். தற்போது ஒரு ஹீரோவாகவும் இயக்குநராகவும் கோலிவுட்டில் வலம் வருகிறார்.

இந்நிலையில், சுதந்திர இசைக்கலைஞரான ஆதி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ‘நான் ஒரு ஏலியன்' என்ற புதிய ஆல்பம் பாடல்களை வெளியிடவுள்ளார். 6 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தை ‘திங்க் மியூசிச்' வழங்குகிறது.

இந்த ஆல்பத்திலிருந்து ‘நெட்ட தொறந்தா' எனும் பாடலை First Single-ஆக இன்று வெளியிட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் எதிர்மறைதன்மையை மையமாகக் கொண்டு, மார்ஸ் கிரகத்திலிருந்து வந்த ஒரு ஏலியன் பாடுவதைப் போன்ற இப்பாடல் இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

சுந்தர் சி தயாரிப்பில் 'மீசைய முருக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக, இயக்குநராக அறுமுகமான அவர், அதையடுத்து ‘நட்பே துணை' மற்றும் ‘நான் சிரித்தால்' என இரண்டு படங்களில் நடித்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஆதி தற்போது கதாநாயகனாக நடிக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com