முகப்புகோலிவுட்

செயலற்ற கணக்குகளை ரத்து செய்யும் NETFLIX.!

  | May 23, 2020 15:44 IST
Netflix

நெட்ஃபிக்ஸ் தற்போது உலகெங்கிலும் 183 மில்லியன் சந்தா உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது.

முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் உள்ள கணக்குகளின் சந்தாக்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் தொடங்கி, NETFLIX தங்கள் வாடிக்கையாளர்கள் / சந்தாதாரர்களை மின்னஞ்சல்கள் அல்லது பயன்பாட்டு அறிவிப்புகள் மூலம் அறிவிக்கத் தொடங்கும். சந்தாக்கள் / கணக்குகளைத் தொடர்ந்து வைத்திருக்க அவர்கள் தயாரா என்று கேள்வி எழுப்பப்படும். அவற்றுக்கு பயனர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லாத சந்தர்ப்பங்களில், நெட்ஃப்ளிக்ஸ் கணக்குகளை தானாக நீக்கும்.

செயலற்ற கணக்குகள் என்பது அரை சதவீதத்துக்கும் (0.5%) குறைவானதாகவே இருக்கிறார்கள் என்று நெட்ஃபிக்ஸின் Eddy Wu (Director of Product Innovation) தெரிவித்துள்ளார். நெட்ஃபிக்ஸ் தற்போது உலகெங்கிலும் 183 மில்லியன் சந்தா உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com