முகப்புகோலிவுட்

தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

  | June 05, 2019 18:54 IST
Tfpc

துனுக்குகள்

  • விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தார்
  • நடிகர் சங்கத் செயலாளராகவும் பதிவி வகித்தார் விஷால்
  • வரும் 23ல் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கிறது
தென் இந்திய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் என்.சேகரை தனி அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது.
 
 தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தின் பதவி காலம் முடிந்துவிட்டதால், சங்கத்தின் தேர்தலை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து இரு வழக்கையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி, தேர்தலை நடத்துவது தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறை செயலாளர், பத்திரப்பதிவுத்துறை தலைவர், சங்கத்தை தற்போது நிர்வகிக்கும் தனி அதிகாரி, சங்க தலைவர் விஷால் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 
மேலும் வரும் ஜுன் 23ல் நடிகர்சங்கத் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் விஷால் செயலாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்