முகப்புகோலிவுட்

சூர்யாவின் 'சூரரை போற்று' முக்கிய அப்டேட்!

  | October 09, 2019 10:46 IST
Soorarai Pottru

துனுக்குகள்

  • தமிழில் சுதா கொங்காரா இயக்கும் மூன்றவது படம் இது
  • சூர்யாவின் 2 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
  • அடுத்த ஆண்டு பொங்கல் அன்று இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது
கே.வி. ஆனந்த்தின் ‘காப்பான்' படத்தை அடுத்து நடிகர் சூர்யா ‘இறுதி சுற்று' படத்தை இயக்கிய சுதாகொங்காரா இயக்கும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘சூரரை போற்று' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோயாக அபர்னா பால முரளி நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
 
7iro4sk8

 
திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் பணியை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையெட்டி ரஜினியின் தர்பார் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
படப்பிடிப்பு பணி முடிந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் பரிசு வழங்கி மகிழ்வித்தாராம் நடிகர் சூர்யா. இந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு இரண்டு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் சினிமாவிற்கு சிறந்த தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்