முகப்புகோலிவுட்

'ரத்னா..ஐ லவ் யு..' - வாழ்த்துக்கு நன்றி சொன்ன நடிகர் வைபவ்

  | April 24, 2020 13:53 IST
Vaibhav

துனுக்குகள்

 • பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் வைபவ்
 • தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் மாஸ்டர்
 • இந்நிலையில் அதற்கு நன்றிகூறிய வைபவ், லவ் யு ரத்னா, நிச்சயம்
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் வைபவ் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான படம் தான் மேயாத மான். இந்த படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராகக் கால்பதித்தவர் தான் ரத்னா குமார். சில போராட்டங்களுக்குப் பிறகு அமலா பாலின் துணிச்சலான நடிப்பில் வெயிலான ஆடை திரைப்படத்தை இயக்கியது இவர் தான். மேயாத மான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் 'ஆடை' திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. 

தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இவர் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கும் முன்பு ஏப்ரல் 21ம் தேதி நடிகர் வைபவின் பிறந்தநாளை 
முன்னிட்டு. அவரோடு இணைந்து பணியாற்றிய மேயாத மான் திரைப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை கூறினார். 
 
இந்நிலையில் அதற்கு நன்றிகூறிய வைபவ், லவ் யு ரத்னா, நிச்சயம் அடுத்த வருடம் இதே நேரம் நாம் ஒரு படத்தை தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com