முகப்புகோலிவுட்

யோகா டீச்சராக உருவெடுக்கம் ரகுல் ப்ரீத் சிங்

  | February 06, 2019 13:01 IST

துனுக்குகள்

  • தேவ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் இணைந்திருக்கிறார்
  • சூர்யாவின் என்.ஜி.கே படத்திலும் நடித்திருக்கிறார்
  • தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்
குறுகிய காலத்தில் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிகர் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் ‘தேவ்' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.
 
கார்த்தியின் அண்ணனான சூர்யாவுடன் என்.ஜி.கே படத்திலும் இவர் நடித்திருக்கிறார் இரண்டு படங்களும் படப்படிப்பு முடிந்து வெளிவர தயாராக இருக்கிறது. தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். தற்போது நடிகை ராகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் ‘மர்ஜாவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் யோகா டீச்சராக நடிக்கிறார் ராகுல் ப்ரீத் சிங். இதற்காக தற்போது தீவிரமான யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்தப் படத்தில் ‘யோகா டீச்சர் வேடத்தில் நடிக்கிறீர்களா? என்றதற்கு ‘இப்போதே அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால் மனித வாழ்வுக்கு தேவைக்குரிய ஒன்றான யோகாவின் அவசியத்தை உணர்த்தும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன் என்றார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்