முகப்புகோலிவுட்

காதலர் தினத்தை கலர்ஃபுல்லாக்க வருகிறது சூர்யாவின் என்.ஜி.கே புதிய அப்டேட்

  | January 27, 2019 09:41 IST
Ngk Update

துனுக்குகள்

  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • சூர்யா, சாய்பல்லவி இப்படத்தில் நடித்துள்ளனர்
  • ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்ததிரத்தில் நடிக்கிறார்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள  திரைப்படம் `என்ஜிகே'. சமகால அரசியல் கலந்த திரில்லர் படமாக இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.   
 
சமீபகாலமாக சூர்யா நடிப்பில் வெளிவிந்த படங்கள் எதுவும் பெரும் நம்பிக்கையை தராதநிலையில் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.  
 
மேலும் தற்போது தமிழ்சினிமாவில் மலர் டீச்சரின் மவுசு அதிகரித்திருப்பதால் சாய் பல்லவின் நடிப்பை கான ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருக்கின்றனர்.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவிற்கு இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்று சிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
 
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், `என்ஜிகே' படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தபடத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்