முகப்புகோலிவுட்

சசிகுமாருடன் ஜோடி சேர்கிறார் நிக்கி கல்ராணி…….

  | February 06, 2019 16:00 IST
Nikki Galrani

துனுக்குகள்

  • இந்த படத்தை சுந்தர் சியின் உதவி இயக்குநர் கதிர் இயக்குகிறார்
  • சாம் சி. எஸ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • நிக்கி கல்ராணி இப்படத்தில் நடிக்கிறார்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் சசிகுமார் ரஜினியின் நண்பராக நடித்திருப்பார். குறுகிய நேர காட்சிகளில் வந்திருந்தாலும் தனக்கான நடிப்பை ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு தனது பங்கை செலுத்தியிருப்பார் சசிகுமார்.
 
இந்த படங்களைத் தொடர்ந்து, அவர்  ‘நாடோடிகள் 2', ‘கொம்பு வச்ச சிங்கம் மற்றும் ‘கென்னடி கிளப்' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் சுந்தர் சியின் உதவியாளர் கதிர் இயக்கவுள்ள ஒரு படத்தில் சசிகுமார் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போதைக்கு படத்திற்கு ‘சசிகுமார் 19' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

நிக்கி கல்ராணி இந்த படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்