முகப்புகோலிவுட்

சமூக ஆர்வலராக நடிக்கும் நிக்கி கல்ராணி….

  | January 24, 2019 11:39 IST
Charlie Chaplin 2

துனுக்குகள்

  • சார்லி சாப்ளின் 2 வில் பிரபுதேவா நடித்திருக்கிறார்
  • அம்மா கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது
  • நிக்கி கல்ராணி,அதா சர்மா இரண்டு ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்
நடிகர் பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடித்திருக்கும் படம் “சார்லி சாப்ளின் 2”. இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக அதா சர்மா நடிக்கிறார். இந்த படத்திற்கு யுகபாரதியின் பாடல் வரிகளுக்கு, அம்ரீஷ் இசை அமைக்கிறார். இம்மாதம் 25ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது.
 
இந்த படம் குறித்து தனியார் பத்திரிகை ஒன்றிற்கு இயக்குநர் ஷக்தி சிதம்பரம் அளித்த பேட்டியில் “பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் கதா பாத்திரத்தில்  நடிக்கிறார்.  நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு தேவா மருத்துவராகவும், அதா சர்மா மனோதத்துவ நிபுணராகவும் நடிக்கிறார்கள். கோவா, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. முதல் பாகம் போலவே இந்த படமும் நிச்சயமாக வெற்றி அடையும்” என்று கூறியிருக்கிறார்.
 
இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது. வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்