முகப்புகோலிவுட்

'புதிய சாதனை படைத்த Police Aur Tiger' - சிபியை வாழ்த்திய சிவா..!!

  | June 21, 2020 13:37 IST
Naikal Jakirathai

துனுக்குகள்

  • தற்போது வால்டர் படத்தை தொடர்ந்து இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில்
  • இந்நிலையில் அண்மையில் அவருடைய நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம்
  • 2.9 கோடி impressionsகளை கொண்டுள்ளது
புகழ்பெற்ற உயரமான நடிகர் சத்யராஜின் மகன் தான் நடிகர் சிபி சத்ய ராஜ். சென்னை லயோலா கல்லூரியில் Commerce முடித்தார். ஆனால் தந்தையை போலவே நடிப்பில் ஆர்வம் கொண்டதால் இயக்குநர் செல்வா இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'ஸ்டுடென்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு ஒரு சிறந்த படமாக அமையவில்லை. இருப்பினும் அதன் பிறகு லீ, நாய்கள் ஜாக்கிரதை, நாணயம் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

தற்போது வால்டர் படத்தை தொடர்ந்து இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம் மற்றும் கபடதாரி போன்ற படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் ஊரடங்கு காரணத்தால் வீட்டில் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் அண்மையில் அவருடைய நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது. "Police Aur Tiger" என்ற பெயரில் இணையத்தில் வெளியான அந்த திரைப்படம் சுமார் 2.9 கோடி impressionsகளை கொண்டுள்ளது. இது 2.9 கோடி பார்வையாளர்களை கொண்டதற்கு சமம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது (ஆறு நாட்களில்). திரைத்துறையினர் பலரும் இந்த நிகழ்விற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com