முகப்புகோலிவுட்

'No more Valentin's day' - பரபரப்புடன் வெளியான பிரபு தேவா-வின் 'பகீரா'

  | February 15, 2020 12:42 IST
Bagheera

இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் கதையாக உருவாகி வருதாகவும், படத்தின் படப்பிடிப்பு சுமார் 75 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

துனுக்குகள்

  • No more Valentin's day என்று தொடங்கும் அந்த போஸ்டர்
  • 'No more Valentin's day' - பரபரப்புடன் வெளியான பிரபு தேவா-வின் 'பகீரா'
  • பகீரா படத்தின் போஸ்ட்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்
மிகப்பெரிய டான்ஸ் மாஸ்டரின் (சுந்தரம் மாஸ்டர்) மகன் என்ற போதும், திரையுலகில் நடிகனாக கால் பதிக்க ஒருவருக்கு சில காலம் எடுத்துக்கொண்டது. நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்று எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தொடங்கினார். ஆனால் அவர் அந்த நடிப்பை தாண்டி ஒரு தலை சிறந்த டான்சராக உருவெடுத்து, இவர் தான் இந்தியவின் 'மைக்கேல் ஜாக்சன்' என்று பலரும் போற்றும் அளவிற்கு வளர்ந்தார், அவர் தான் நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா. 

அண்மைக்காலமாக பாலிவுட்டில் இயக்குனராக பிஸியாக இருந்த இவர், தமிழில் தேவி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்தார். இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் தேள், பகீரா, ஊமை விழிகள் போன்ற படங்கள் வெளிவர உள்ளன. இந்நிலையில் தற்போது பகீரா படத்தின் போஸ்ட்டரை நடிகர் தனுஷ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார். 
 
No more Valentin's day என்று தொடங்கும் அந்த போஸ்டர் முழுவதும் பல மர்மங்கள் அடங்கியுள்ளது. பகீரா என்பது ஜங்கிள் புக் கதையில் வரும் ஒரு கற்பனை கதாபாத்திரம். அதே போல இந்த போஸ்டரில் தலையில் ரத்தம் வழிய மூன்று பக்கம் கொண்ட கண்ணாடிகளை அணிந்துள்ளார் பிரபு தேவா. அந்த கண்ணாடியின் ஒரு பக்கத்தில் தி ஜங்கிள் புக் கதையில் வரும் ஒரு காட்சியும். 2 வது பக்கத்தில் 11:11 என்ற நேரமும் மற்றும் மூன்றாவது பக்கத்தில் ஒரு காரும் இருக்கிறது. 
 
இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் கதையாக உருவாகி வருதாகவும், படத்தின் படப்பிடிப்பு சுமார் 75 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்