முகப்புகோலிவுட்

“எங்களை யாராலும் பிரிக்க முடியாது”! ரஜினி குறித்து கமல் நெகிழ்ச்சி!

  | November 08, 2019 13:49 IST
Kamal Hasan

துனுக்குகள்

  • கமல் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழா நடைபெற்றது
  • ரஜினி வைரமுத்து மனிரத்னம் இவ்விழாவில் கலந்துகொண்டனர்
  • ரஜினியையும் தன்னையும் யாராலும் பிரிக்க முடியாது என கமல் கூறினார்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் 3 நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மூன்று நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார். நேற்று அவர் தன் தந்தை சிலையை திறந்து வைத்தார். இன்று அவருடைய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழாவை நடத்தினார். இதில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்விற்கு ரஜினி, வைரமுத்து, மனிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய கமல்,

“ரஜினி வேற பாணி, நான் வேற பாணி, இதை நாங்கள் இருவரும் பேசி முடிவு செய்தது. வேப்பம்மரத்து அடியில் இருந்து இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டேம். எங்களுக்கு ரசிகர்கள் உருவாவதற்க முன்பே நாங்கள் ஒருவரை ஒருவரின் ரசிகர்களானோம். நாம் ஒருவருக்கொருவர் மிக மரியாதையாக நடந்துக்கொள்ள வேண்டும். நாங்கள்தான் எங்களின் விமர்சகர்கள், ரசிகர்கள். ரசிகர்கள் எங்களை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தினார்கள். நாங்களும் அதையே விரும்பினோம். அவர்கள் ஒருவரை ஒருவரை விமர்சித்துக்கொண்டார்கள் ஆனால் நாங்கள் இன்னும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். நானம் ரஜினியும் பேசிக்கொள்வதால் எங்களை போட்டுக்கொடுப்பவர்கள் குறைந்தார். அவருக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.  இது தாமதம் என்றாலும் வழங்கியவர்களுக்கு நன்றி. யார் எதை சொன்னாலும் நாங்கள் நேரிலே பேசிக்கொள்வோம். எங்கள் கைகளை யாராலும் பிரிக்க முடியாது என்றார்.” இதனைத் தொடர்ந்து மனிரத்னம் குறித்து பேசும் போது.

“மணிரத்னம் படங்களை பார்த்து நான் வியந்து இருக்கிறேன். தளபதி படம் எடுக்கும் போது ஒரு திருமண மண்டபத்தில் படத்தின் தலைப்பை கூறினார். சத்தத்தில் எனக்கு கணபதி என்று கேட்டது. தலைப்பு எப்படி இருக்கு என்றார் நான் இந்த தலைப்பு நல்லா இல்லை என்றேன். அவர் என்ன சொல்றீங்க தளபதி தலைப்பு நல்லா இல்லையா என்றார். தலைப்பு தளபதியா என்காதில் கணபதி என்று கேட்டது அதனால் அப்படி சொன்னேன் பிரமாதமான தலைப்பு என்று கூறினேன்.

என்னுடைய அலுவலகத்தில் அய்யா கே.பாலசந்தரின் சிலை திறந்திருப்பது ஒவ்வொரு நாளும் அவர் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்கிற பதட்டம் எனக்கு இருக்கும்.

ராஜ் கமலின் 50வது பிரம்மாண்டமான படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். வைரமுத்துவின் திருப்பி எழுதிய தீர்ப்பு புத்தகம் பார்க்காமல் ஞாபகமாக படித்து காட்டுவேன். அந்த அளவிற்கு அவருடைய எழுத்துக்கள் என்னை ஈர்த்தது. திரையுலகில் இத்தகைய நண்பர்களை நான் இன்னும் தக்கவைத்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கு என்னுடை நன்றிகள் ” என்றார்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்