முகப்புகோலிவுட்

இமான் தந்த வாய்ப்பு; நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் குரலில் ‘செவ்வந்தியே’ பாடல் செம ட்ரெண்ட்..!

  | December 03, 2019 16:14 IST
D Imman

துனுக்குகள்

 • ஜீவாவின் சீறு படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.
 • இப்படத்திலிருந்து செவ்வந்தியே பாடல் வெளியாகியுள்ளது.
 • இப்பாடலை நொச்சிப்பட்டி திருமூர்த்தி பாடியுள்ளார்.
இமான் இசையில் ‘செவ்வந்தியே' பாடலின் மூலம் சினிமா பின்னணிப் பாடகரான நொச்சிப்பட்டி திருமூர்த்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கிஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன் தாயையும் இழந்த இவர், இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஊரில் அணைவருக்கும் செல்லப்பைள்ளையாக இருக்கும் இவருக்கு, மிமிக்கிரி செய்வது, பாட்டு பாடுவது மற்றும் பறை, டேப், கீபோர்டு என எந்த இசைக்கருவியிலும் வாசிப்பது போன்ற பல திறமைகள் உள்ளன. குடம், அட்டை என எந்த பொருளிலும் பிசுறு தட்டாமல் தாளம் அடிக்ககூடியவர்.

பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் டிக்-டாக் எனும் ஆண்ட்ராய்டு செயலி மூலம் இவரின் திறமையும் வெளியுலகிற்கு தெரியவந்தது. இவரின் இசை மற்றும் பாடல்களுக்கு டிக்-டாக்கில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் பாரட்டுக்களைப் பெற்றார். இப்படி, அவர் பாடிய ‘கண்ணான கண்ணே' எனும் அஜித்தின் விஸ்வாசம் படப் பாடல் எல்லா சமூக வலைதளங்களிலும் பறவ, நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் குரல் இசையமைப்பாளர் டி. இமானுக்கும் சென்றடைந்தது.
திருமூர்த்தியின் குரளைக் கெட்டு வியந்த இமான் உடனடியாக, தனது  ட்விட்டர் பக்கத்தில் “இந்த திறமைசாலியின் தொடர்பு எண்ணை பகிருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். அதையடுத்து தனது உதவியாளரகள் மூலம் திருமூர்த்தியை நேரில் சந்தித்து தனது இசையில் திரைப்படத்துக்கு பாடல் பாட வாய்ப்பளித்தார் இசையமைப்பாளராக வேண்டும் என்ற திருமூர்த்தியின் கனவுக்கு இந்த வாய்ப்பு முதல்படியாக அமைந்துள்ளது.

ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சீறு திரைப்படத்துக்காக இமான் இசையில் செவ்வந்தியே எனும் பாடலை திருமூர்த்தி பாடியுள்ளார். இப்பாடல் லிரிக்கல் வீடியோவாக இணையத்தில் நேற்று வெளியானது. இப்படல் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்பாடலைப் பார்த்த பலரும், திருமூர்த்தியைப் பாராட்டிவருகின்றனர். இப்பாடல் வெளியிட்டது, இமான் தனது ட்விட்டர் பக்கத்திலில் இப்பாடலின் லின்க்கை பகிர்ந்து, திருமூர்த்தியின் மீதுள்ள பரிதாபத்தை தவிர்த்து, அவரின் குரல் மற்றும் பாடல் பிடித்திருந்தால் இந்த பாடலை ஷேர் செய்யுமாறு, மேலும் பல இசையமைப்பாளர்களும் இவரின் திறமைக்கு வாய்பளிக்குமாறு கேட்டு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com