முகப்புகோலிவுட்

'அந்த மாதிரி திட்டம் எதுவும் இல்லை..!!' - 'Making Movies' புத்தகம் படிக்கும் நடிகர் சிபி சத்யராஜ்

  | May 28, 2020 14:21 IST
Making Movies

துனுக்குகள்

 • புகழ்பெற்ற உயரமான நடிகர் சத்யராஜின் மகன் தான் நடிகர் சிபி சத்ய ராஜ்
 • வீட்டில் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார்
 • புதிதாக புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் தொடங்கியுள்ளார்
புகழ்பெற்ற உயரமான நடிகர் சத்யராஜின் மகன் தான் நடிகர் சிபி சத்ய ராஜ். சென்னை லயோலா கல்லூரியில் Commerce முடித்தார். ஆனால் தந்தையை போலவே நடிப்பில் ஆர்வம் கொண்டதால் இயக்குநர் செல்வா இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'ஸ்டுடென்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு ஒரு சிறந்த படமாக அமையவில்லை. இருப்பினும் அதன் பிறகு லீ, நாய்கள் ஜாக்கிரதை, நாணயம் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

தற்போது வால்டர் படத்தை தொடர்ந்து இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம் மற்றும் கபடதாரி போன்ற படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் ஊரடங்கு காரணத்தால் வீட்டில் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் புதிதாக புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் தொடங்கியுள்ளார் (இயக்கம் குறித்த புத்தகம்) சிபி சத்தியராஜ், இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் "இயக்குநர் ஆசை ஒன்றும் இல்லை. என் நேரத்தை செலவிடுவதற்காகவே இதை செய்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளார்."

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com