முகப்புகோலிவுட்

ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான ஃபோட்டோவுடன் தெளிவுபடுத்திய ‘பாக்ஸர்’..!

  | June 24, 2020 13:51 IST
Arun Vijay

இந்த திட்டத்திற்கு என்னை தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன், ஆனால் இன்னும் முழு அளவிலான படப்பிடிப்பை தொடங்கவில்லை.

ஆக்‌ஷன் ஸ்டார் அருண் விஜய் நடிப்பில், Etcetera Entertainment பேனரில் வி. மதியழகன் தயாரிப்பில், விவேக் இயக்கும் திரைப்படம் ‘பாக்ஸர்'. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ‘இறுதி சுற்று' புகழ் ரித்திகா சிங் நடிக்க, உடன் சஞ்சனா கல்ரானி ஒரு முக்கியமாக வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, லண்டன் ஒளிப்பதிவாளர் Markus A Lujungbern ஒளிப்பதிவு செய்கிறார். 

இத்திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை, ‘மெர்ஸல்' திரைப்பட தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்வுள்ளார். இதற்கிடையில், இப்படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக, இப்படத்தை தயாரிக்கும் மதியழகன் தான் நடிக்கிறார் என்பதும் உறுதியாக தெரியவந்தது.

இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிக்கப்படாத நிலையில், பலரும் இப்படம் குறித்த அப்டேட்டை ஆர்வமாக அருண் விஜய்யிடம் கேட்டுக்கொண்டே இருக்க, இப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பாக்ஸர்' படம் குறித்த தற்போதைய நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இப்படம் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தையும் அவர் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த பதிவில் “அனைவருக்கும் வணக்கம். நீங்கள் நிறைய பேர், என் திரைப்படம் பாக்ஸர் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள், அதற்காக நீங்கள் அனைவரையும் போலவே நான் உற்சாகமாக இருக்கிறேன். இந்த திட்டத்திற்கு என்னை தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன், ஆனால் இன்னும் முழு அளவிலான படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்த திரைப்படத்திற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வேலை செய்யப்பட வேண்டும், இது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஒரு தெளிவுடன் மட்டுமே செய்ய முடியும். எனவே திட்டம் குறித்து எனது தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக தயவுசெய்து காத்திருங்கள். நன்றி. அதுவரை உங்கள் அனைவருக்காக இதோ ஒரு புகைப்படம்” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com