முகப்புகோலிவுட்

புதிய படத்துக்காக இணையும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி..?

  | July 24, 2020 14:00 IST
Dhanush

வெற்றிமாறன் & பரோட்டா சூரி கூட்டணி படத்துக்கு எல்ரெட் குமார் தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான இயக்குநர்-நடிகர் கூட்டணிகளில் ஒன்று வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி. தனுஷ் கதாநாயகனாக நடித்த பொல்லாதவன் படத்தின்மூலம் அறிமுகமான இயக்குநர் வெற்றிமாறன், தொடர்ந்து அவருடன் ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றினார். அவர்கள் கூட்டணியில் அடுத்ததாக ‘வட சென்னை- 2' அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது எப்போது தொடங்கும் என்ற எந்த அதிகாரப்பூரவ தகவலும் இல்லை.

இதற்கிடையில், தயாரிப்பாளர்-இயக்குநர் எல்ரெட் குமார் தயாரிக்கும் ஒரு படத்திற்கு வெற்றி மாற்னும் தனுஷும் மீண்டும் ஒன்றிணையவுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மூவருக்கும் இடையில் சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

‘வாடிவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் நேற்று சூரியாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. வெற்றி மாறன் 'வாடிவாசல்' மற்றும் பரோட்டா சூரியின் நடிப்பில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார். அதில் சூரியின் படத்துக்கு எல்ரெட் குமார் தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்' பட வெளியீட்டுக்காக காத்திருக்கு தனுஷ், மாரி செல்வராஜுடன் கர்ணன், பாலிவுட்டில் ஆனந்த் எல் ராயின் அட்ராங்கி ரே ஆகிய படங்களை வரிசையாக கொண்டுள்ளார். மேலும், அவருடைய சொந்த படைப்பான ‘நான் ருத்ரன்' படத்தையும் இயக்கவுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com