முகப்புகோலிவுட்

விஷால் மற்றும் நாசருக்கு பதிவுத்துறை நோட்டிஸ்!

  | October 08, 2019 15:09 IST
Nasar

துனுக்குகள்

  • நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாமல் இருக்கிறது
  • பதிவுத்துறை நாசருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
  • இந்த தேர்தலில் விஷால் பொதுச்செயலாளராக போட்டியிட்டுள்ளார்
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து தேர்தல் தேதிகள் அறிவித்து தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர், விஷால் அணி ஒரு பிரிவும் பாக்கியராஜ் அணி ஒரு பிரிவினருமாக தேர்தலில் களம் கண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த தேர்தலில் முடிவுகள் இன்னும் வெளிடப்படாமல் இருக்கிறது. தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை குளறுபடியாக இருந்ததாகக்கூறி தொடரப்பட்ட வழங்கின் காரணமாக இந்த தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
 
இதன் காரணமாக நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சங்கம் முறையாக செயல்படாதது குறித்தும், தனி அதிகாரிகள் நியமனம் குறித்தும் முன்னாள் செயலாளராக இருந்த விஷால் , மற்றும் தலைவராக இருந்த நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த தகவல் கோடம்பாக்கம் பகுதியில் பரபரபப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது குறித்த வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்