முகப்புகோலிவுட்

"அப்போ விஜய் படம் இப்போ சூர்யா படம்" - வெளியான சூரரைப் போற்று அப்டேட்

  | February 23, 2020 16:35 IST
Soorarai Pootru Update

2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்துடன் இந்த படத்தை இணைத்து இயக்குகிறது 'சிக்ஹ்யா' என்டர்டைன்மெண்ட்ஸ்

துனுக்குகள்

  • "அப்போ விஜய் படம் இப்போ சூர்யா படம்"
  • வெளியான சூரரைப் போற்று அப்டேட்
  • ஏப்ரல் மாதம் வெளிவர உள்ள திரைப்படம் தான் சூரரைப் போற்று
சுதா கே. பிரசாத் இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் பிகில் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரஆஃ நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் வெளிவர உள்ள திரைப்படம் தான் சூரரைப் போற்று. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது என்றால் அது மிகையல்ல. ஜி.வி பிரகாஷ் இசையமைக்க சூரியவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்துடன் இந்த படத்தை இணைத்து இயக்குகிறது 'சிக்ஹ்யா' என்டர்டைன்மெண்ட்ஸ் என்ற நிறுவனம். 

தற்போது சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று படம் குறித்த ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனேவ சன் நிறுவனம் மாஸ்டர் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்