முகப்புகோலிவுட்

சுசீந்திரனின் ‘சாம்பியன்’ பட விறுவிறு ட்ரைலர்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

  | December 03, 2019 15:28 IST
Champion

துனுக்குகள்

  • சாம்பியன் திரைப்படம் இமாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • இப்படத்தில் நரேன் மற்றும் மனோஜ் பாரதிராஜா நடித்துள்ளனர்.
  • இப்படத்துக்கு அரோல் கொரலி இசையமைத்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சாம்பியன் திரப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியானது.

சசிகுமார் நடித்த ‘கெண்ணடி கிளப்' திரைப்படத்திறகுப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் ஏஞ்சலினா மற்றும் சாம்பியன் ஆகிய திரைப்படங்களை இயக்கிவருகிறார். இந்த இரு படங்களும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேளைகளில் உள்ளது. இதில் சாம்பியன் திரைப்படம் முதலில் வெளியாவுள்ளது.

சாம்பியன் திரைப்படத்தில் விஷ்வா மற்றும் மிருணாளினி நாயகன்-நாயகியாக அறிமுகமாகின்றனர். இப்படத்தில் முக்கிய வேடங்களில் மனோஜ் பாரதிராஜா மற்றும் நரேன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவும், தியாகு படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படத்தை களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது.
அரோல் கொரலி இசையமித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நான் மகான் அல்ல, பாண்டிய நாடு போன்ற படங்களைப் போலவே இப்படமும் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம், இம்மாதம் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்