முகப்புகோலிவுட்

‘ஓ மை கடவுளே’ ட்ரைலர் வெளியானது..!

  | January 31, 2020 17:16 IST
Oh My Kadavule

இப்படத்தில் ஷா ரா, எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், மாஸ்டர் ஜெயாதித்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அஷோக் செல்வன் நடிக்கும் ‘ஓ மை கடவுளே' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அஷோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஓ மை கடவுளே'. ரொமாண்டிக் காமெடி கதையான இப்படத்தை Axess Film Factory மற்றும் Happy High Pictures இணைந்து தயாரித்துள்ளது. சின்னத்திரைப் பிரபலம் வானி போஜன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  இப்படத்தில் ஷா ரா, எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், மாஸ்டர் ஜெயாதித்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து, லியோன் ஜேம்ஸ் இசையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடிய ‘என்னடா லைஃப் இது' என்ற பாடல் வெளியாகி சமீபத்தில் வெளியானது.
வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்