முகப்புகோலிவுட்

நயன்தாராவை நடிகையாகத் தெரியும், VJ டயானாவாகத் தெரியுமா..? வைரலாகும் சர்ப்ரைஸ் வீடியோ..

  | November 23, 2019 11:22 IST
Nayanthara

நயன்தாராவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவை எல்லோருக்கும் தெரியும். அவர் ஹரி இயக்கத்தில் சரத்குமருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுக்டன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் தனியாகவே ஸ்கோர் செய்யும் அளவுக்கு தென்னிந்தியாவின் டாப் நடிகையாக உள்ளார்.

ஐயா படத்துக்கு முன்னரே மலையாலத்தின் ‘மனசினகாரே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்துவிட்டார். ஆனால், அதற்கும் முன்பாக அவர் கைராலி தொலைக்காட்சியில் ஒரு 18 நிமிட நிகச்சியில், ‘பியூட்டி டாக்டர்' எனும் 5 நிமிட செக்மெண்டில் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் தோன்றியுள்ளார். தற்போது முன்னணி நடிகைகளில் முதலிடத்தில் வைத்துப் பார்க்கப்படும் அவருக்கு இந்த 5 நிமிட நிகழ்ச்சியே அடித்தளம்.

கடந்த வாரம் (நவம்பர் 18) பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு ஒரு சிறந்த பரிசாக பழைய ஞாபகந்த்தை தரும் வகையில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அவரின் தொகுப்பாளினியாக பணியாற்றிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டது. நயன்தாரா  அந்த நிகழ்ச்சி நிறைவில் “மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் பார்க்கலாம், until then its டயானா, sining off" என்று பேசும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. ஒரு தொகுப்பாளினியாக இருந்து இவ்வளவு தூரம் சினிமாத்துறையில் பயனித்து, நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்துள்ள அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடைசியாக பிகில் படத்தில் நடித்த நயன்தாரா தற்போது "தர்பார்" வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். மேலும், "நெற்றிக்கண்" மற்றும் "மூக்குத்தி அம்மன்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்..
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com