முகப்புகோலிவுட்

தன் பிறந்த நாளில் தர்பார் படத்தின் அதிரடி அப்டேட்டை வெளியிட்ட அனிருத்!

  | October 17, 2019 16:44 IST
Anirudh

துனுக்குகள்

 • இன்று அனிருத் பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்
 • தனது பிறந்த நாள் விழாவை தர்பார் அப்டேட்டுடன் தொடங்கினார் அனிருத்
 • வரும் பொங்கல் அன்று இப்படம் வெளியாக இருக்கிறது
இன்று பிறந்தநாள் காணும் இளம் இசை அமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்துகள்.#HBDAnirud மிகச்சிறப்பான இந்நாளில் தர்பார் படத்தின் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டு பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அனிருத்.
 
லைகா நிறுவனம் தயாரித்து வரும் ‘தர்பார்'#darbar படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான ‘பேட்ட' படத்திற்கு இளம் இசை அமைப்பாளர் அனிருத் முதல் முறையாக ரஜினி படத்திற்கு இசை அமைத்தார். இப்படத்தை அடுத்து தற்போது தர்பார் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு இசை அமைத்துவருகிறார்.
 
தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த்(Rajinikanth) இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவர் காவலர் சீறுடையில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் ஸ்ரேயா சரண், யோகி பாபு, நிவேதா தாமஸ், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
அடுத்த ஆண்டு பொங்கல் விழாவின் விடுமுறை நாட்களை மைய்யப்படுத்தி இப்படத்தை களம் இறக்க படக்குழு முடிவு செய்துள்ள நிலையில்இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் அனிருத்  ஒரு முக்கிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “என்னுடைய இந்த சிறப்பான நாளில் இந்த தகவலை உங்களுக்கு கொடுப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி தர்பார் படத்தின் பர்ஸ்ட் மோஷன் போஸ்டரும், தலைவரின் தீம்மியூசிக்கும் வெளியாகி இருக்கிறது” என பதிவிட்டுள்ளார், இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com