முகப்புகோலிவுட்

"தாதா 87 - 2.0" - விரைவில் வெளியாகும் டைட்டில் மற்றும் First Look..!

  | August 02, 2020 10:26 IST
Dhadha 87

துனுக்குகள்

  • உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் 80-களில்
  • இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக வலம் வந்தார். ஜனகராஜ் ஓய்வு பெற்ற இராணுவ
  • இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் First Look
உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் 80-களில் வெளியான பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ‘தாதா 87' என்ற படத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் 80, 90-களில் நகைச்சுவையில் மட்டுமின்றி, குணச்சித்திர கேரக்டர்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்த ஜனகராஜ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக வலம் வந்தார். ஜனகராஜ் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவும், கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ட்ரைலர் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. படமும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. 

தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விஜய் ஸ்ரீ அண்மையில் இந்த படத்தின் first லுக் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் First Look வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com