முகப்புகோலிவுட்

"ஓர் ஆண்டு, பல விருது" - அசத்தும் 'கிறுக்கல் நாயகனின்' ஒத்த செருப்பு - சைஸ் 7..!

  | September 20, 2020 08:49 IST
Oththa Seruppu

துனுக்குகள்

 • வழக்கமான பாதையில் இருந்து சற்று விலக்கி 'டேக் diversion' எடுக்க வைக்கும்
 • பார்த்திபன், இந்த தனிமனிதன் உலக நாயகனைப் போல சோதனை முயற்சியில்
 • பாராட்டப்பட வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் வேண்டுகோள்
பிரபல இயக்குநர் பாக்கியராஜ் மட்டும் இன்றி அவருடைய சீடர்களும் காலம் கடந்த சிறந்து விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவை அதன் வழக்கமான பாதையில் இருந்து சற்று விலக்கி 'டேக் diversion' எடுக்க வைக்கும் சில இயக்குநர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் தான் இயக்குநர் பார்த்திபன், புதிய பாதை மூலம் தனது தனி பாதையை வகுத்து அதன் வழி நடந்து வருகின்றார். இவர் கிறுக்கல்களும் பல கவிதை சொல்லும், தான் எடுத்த படம் மட்டும் இன்றி இவர் நடித்த பல படங்களிலும் இவர் நடிப்பு பலராலும் வியந்து பாராட்டப்பட்டுள்ளது. 

பார்த்திபன், இந்த தனிமனிதன் உலக நாயகனைப் போல சோதனை முயற்சியில் சற்றும் சோர்வுற்றதில்லை. வெற்றி தோல்வி என்பதை கடந்த, இதை முதலில் முயற்சித்தது இவரே என்று கூறும் அளவிற்கு சினிமா மீது காதல் கொண்ட ஒரு சினிமா பித்தன். இந்த கலைஞனின் முயற்சியில் கடந்த ஆண்டு உருவானது "ஒத்த செருப்பு சைஸ் ஏழு" என்ற படம். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என்று அனைத்தும் கையாண்டது பார்த்திபன் ராதாகிருஷ்னன் என்ற 'ஒன் மேன்' என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம், இந்தியா என்பதை தாண்டி உலக அளவில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சற்று தாமதமான அங்கீகாரம் என்றபோதும் ஒரு கலைஞனை முன்னோக்கி நகர அந்த விருதுகள் வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த தனி மனிதனின் சாதனை இன்னும் அதிக அளவில் பாராட்டப்பட வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் வேண்டுகோள். முதலாம் ஆண்டு வெற்றியில் இருக்கும் ஒத்த செருப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.   

 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com